பச்சரிசி மாவு
பால்
வெல்லம்
நெய்
துருவிய தேங்காய்
ஏலக்காய்
குங்குமப்பூ
தண்ணீர்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை நன்கு ஊற வைத்து மண் இல்லாமல் வடிகட்டவும்.பிறகு ஒரு கனமான பாத்திரத்தில் ஒரு பகுதி கரைந்த வெல்லத்தை மட்டும் எடுத்து நன்கு கொதிக்கவிடவும். (மீதி வெல்லத்தின் நீரை வைத்துக் கொள்ளவும். தேவைப்படும்)வெல்லம் நன்கு கொதிக்கும் சமயத்தில் அதனை நன்கு கிண்டி தேங்காய்த் துருவல், ஏலப் பொடி, நெய் இவற்றை எல்லாம் போட்டுப் பின்னர் அரிசிமாவையும் போட்டு, விடாமல் சுமார் 5 நிமிடங்கள் கெட்டியாக கிளறிக் கொண்டே இருக்கவும்.கெட்டியாக வந்த மாத்திரத்தில் இந்த மாவை சிறு, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் இட்லி வாணலியில் கால் பாகம் தண்ணீர் வைத்து அதில் இட்லித் தட்டை வைத்து அதன் மீது உருண்டைகளை வைத்து நன்கு 15 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.மறுபுறம் பாலைக் காய்ச்சி அதில் மீதி வெல்ல நீரை போட்டுக் கிண்டி நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிதளவு குங்குமப்பூ, ஏலப்பொடி, வேக வைத்த உருண்டைகள் இவைகளைப் போட்டு 5 நிமிடங்கள் கொதித்த பின்னர் இறக்கி விட வேண்டும்..இதோ இப்போது சுவையான பால் கொழுக்கட்டை தயார்.