தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு 50 கிராம்
தக்காளி மூன்று
புளி சிறு நெல்லிக்காய் அளவு
சீரகம் ஒரு ஸ்பூன்
மிளகு ஒன்றரை ஸ்பூன்
பூண்டு 10 பற்கள்
கடுகு ஒரு டீஸ்பூன்
வரமிளகாய் ஒன்று
கருவேப்பிலை
கொத்தமல்லி இலை
தேவையான அளவு எண்ணெய் தாளிக்க
செய்முறை
ரசத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம் துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.தக்காளியையும் புளியையும் நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும் அதோடு சீரகம் மிளகு பூண்டு மூன்றையும் மிக்ஸி ஜாரில் அரைத்து போடவும் பருப்பையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை வரமிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளலாம் அந்த அரச கலவையை தாளித்த கடாயில் ஊற்றி கொள்ளவும் பிறகு கொத்தமல்லி இலையை தூவவும்.மிகவும் சுவையான செட்டிநாடு பருப்பு ரசம் தயார்.