ராஜபாளையம்: தென்காசி மாவட்டம், பெத்தநாடார்பட்டியை சேர்ந்தவர் கார்மேகம் (47). அரசு போக்குவரத்துக்கழக டிரைவர். இவர் நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் இருந்து தென்காசி சென்ற அரசு பஸ்சை ஓட்டிச் சென்றார். அப்போது அவருக்கு லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை சமாளித்துக் கொண்டு ஓட்டிச் சென்றார். நெஞ்சு வலி அதிகமான நிலையில், ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் பகல் 1 மணியளவில் பயணிகளை இறக்கி விட்டார். இதையடுத்து அவரை சக ஊழியர்கள் மற்றொரு பஸ்சில் ஏற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.