சென்னை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குரங்கு அம்மை சிகிச்சைக்காக வார்டு தொடக்கம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். சர்வதேச விமான நிலையங்களில் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். குரங்கு அம்மைக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வார்டை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் மா.சு. பேட்டி. தூத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகங்களிலும் கண்காணிப்பு பணி தொடங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.