சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை காவல்துறைக்கு ரூ.74.8 கோடிக்கு 85 இருச்சக்கர வாகனங்கள் வாங்கியதாக சமூக வலைதளத்தில் பரவிய செய்தி வதந்தி எனவும், ரூ.74.8 கோடி அல்ல ரூ.74.8 லட்சம் எனவும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிப்பார்ப்பகம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறை தெரிவித்துள்ளதாவது;
வதந்தி:
‘சென்னை காவல்துறைக்கு ரூ.74.8 கோடி செலவில் 85 அதிநவீன இருசக்கர வாகனங்கள்’ வாங்கியதாக செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
ரூ.74.8 கோடி அல்ல, ரூ.74.08 லட்சம்!
24.07.2024 அன்று சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 40 BAJAJ Pulsar இருசக்கர வாகனங்கள் ரூ.39,38,500 செலவிலும், 45 TVS Jupiter இருசக்கர வாகனங்கள் ரூ.34,69,500 செலவிலும், என மொத்தம் 85 இருசக்கர வாகனங்கள் ரூ.74.08 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்பட்டு முதல்வரால் வழங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.