சென்னை: சென்னை மெட்ரோ ரயில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்று சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராசன் வலியுறுத்தியுள்ளார். சென்னை மெட்ரோ ரயில் தொழிலாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாகவே போனஸ் வழங்கப்படவில்லை என்று சவுந்தரராசன் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், குடிநீர், டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் தரப்படுகிறது.