சென்னை: சென்னை மண்ணடியில் இலங்கையைச் சேர்ந்தவர் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொழில் தொடர்பாக அடிக்கடி மண்ணடிக்கு வந்து செல்லும் இலங்கையைச் சேர்ந்த நபரை கடத்தியதாக அவரது மனைவி புகார் அளித்துள்ளார். தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்தபோது கடத்தப்பட்டதாக புகார் கொடுத்த நிலையில் வடக்கு கடற்கரை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.