சென்னை: சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடை நடத்துவதற்கான டெண்டருக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தீபாவளிக்காக தீவுத்திடலில் பட்டாக விற்பனை செய்வதற்கான டெண்டருக்கு தடை கோரி பட்டாசு விற்பனையாளர் சங்கம் வழக்கு தொடர்ந்திருந்தது. பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கம் என்ற புதிய சங்கத்தை டெண்டரில் பங்கேற்க அனுமதித்தது விதிகளுக்கு முரண் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.