சென்னை: சென்னை மாவட்டத்தில் 2011-ஆம் ஆண்டைய தமிழ்நாடு இருப்பு கிடங்கு விதிகளின்படி இருப்பு கிடங்கு அமைத்து சாதாரண வகை கற்கள். ஜல்லி மற்றும் செயற்கை மணல் (எம்.சேன்ட்) கொண்டுச்செல்ல இடைகடவு சீட்டு (Transit Pass) வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அரசின் சீரிய வழிகாட்டுதலின்படி 2025-26-ஆம் நிதியாண்டில் சென்னை மாவட்டத்தில் எதிர்வரும் 11.06.2025 முதல் மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்யப்பட்ட கிரஷர் மற்றும் இருப்பு கிடங்குகளிலிருந்து ஜல்லி, கற்துகள்கள் மற்றும் செயற்கை மணல் (எம்.சேன்ட்) ஆகியவற்றினை கொண்டு செல்ல https://mimas.tn.gov.in என்ற இணையதள (Online) வாயிலாக சமர்ப்பிக்கப்படும் நடைச்சீட்டுகளின் அடிப்படையில் இடைகடவு சீட்டு (Transit Pass) இணையதள (Online) வாயிலாக மட்டுமே வழங்கப்படும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம் இடைகடவு சீட்டுகள் (Transit Pass) இணையதள முறையில் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால் வாகனங்களில் ஏற்றி செல்லப்படும் அனைத்து கனிமங்களும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு கனிம விற்பனை எளிதாகவும் வெளிப்படைதன்மையுடனும் அமையும். எனவே அனைவரும் இணைய வழி இடைகடவு சீட்டு (Transit Pass) முறையை பயன்படுத்தி பயன்பெற இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.