சென்னை: சென்னை கடற்கரை – விழுப்புரம், கடற்கரை, எழும்பூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணியால் இரவுநேர ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை – விழுப்புரம், கடற்கரை மற்றும் எழும்பூரில் இன்றிரவு 10.30 முதல் அதிகாலை 4.30 வரை பணிகள் நடைபெறவுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.10 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.