சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. கடற்கரை ரயில் நிலையம் அருகே வேகன்கள் தடம் புரண்டதால் ஆவடி, கும்மிடிப்பூண்டி தடத்தில் மின்சார ரயில்கள் தாமதமாக புறப்படும். காலி சரக்கு ரயிலில் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. தடம் புரண்ட வேகன்களை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கடற்கரையில் சரக்கு ரயில் வேகன் தடம் புரண்டது
0