சென்னை: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து மோதியதில் சேதமடைந்த ஒரு பகுதி மீண்டும் சீரமைக்கப்பட்டது. சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து பிரேக்கில் கோளாறு ஏற்பட்டதால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால பக்கவாட்டு சுவரின் மீது மோதி இரு சுவருக்கிடையே சிக்கிக்கொண்டது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.