சென்னை: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால், 10க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமாகியுள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை. நான்கு தீயணைப்பு நிலைய தீயணைப்பு படை வீரர்கள் களத்தில் இறங்கி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.