சென்னை: சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லை. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. பெரியவர்களுக்கு-ரூ.200, ஹேண்டி கேமரா-ரூ.350, கேமரா-ரூ.750, வாகனம் மூலம் பார்வையிட ரூ.150 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வை பூங்கா நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.