சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: அக்.7ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 8ம் தேதி (ஞாயிறு) ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு அக்.6ம் தேதி இன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 600 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.