சென்னை: தாம்பரத்தில் கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணி முடிவடையாததால் சென்னை புறநகர் ரயில் சேவை மாற்றம் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை- தாம்பரம்-செங்கல்பட்டு ரயில் சேவை மாற்றம் வரும் ஆக.14 வரை மாற்றம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆக. 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.