1. Civilian Motor Transport Driver: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர்்்்்்்்்் உரிமமும், மோட்டார் மெக்கானிசம் பிரிவில் அறிவுத் திறனும் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Sheet Metal Worker (Skilled): 1 இடம் (ஒபிசி): வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஒரு வருட ஐடிஐ தேர்ச்சியும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
3. Multi Tasking Staff (Motor Transport Cleaner : 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல் வொர்க்ஷாப்பில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Multi Tasking Staff (Sweeper): 1 இடம் (ஒபிசி): வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
5. Multi Tasking Staff (Chowkidar): 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
6. Unskilled Labour: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ தேர்ச்சியும், 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் எஸ்சி/எஸ்டி யினருக்கு 2ம் வகுப்பு ரயில் கட்டணம்/பஸ் கட்டணம் வழங்கப்படும். மாதிரி விண்ணப்பத்தை www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து தபாலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St., George (PO), CHENNAI- 600 009.
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 18.9.2023.