சென்னை: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறிய குற்றப்பிரிவு தலைமை காவலர் கமலக்கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள தலைமை காவலரை 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் காவல் துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.