சென்னை: சென்னையில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் கனமழை பெய்தாலும் எந்த இடத்திலும் மழைநீர் தேங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 20 செ.மீ. மழை பெய்தாலும் ஒரு மணி நேரத்தில் மழைநீர் வடியும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.