சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்காதிருக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. மழை நீரை அகற்ற சக்திவாய்ந்த மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. 129 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. 120 உணவு தயாரிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் எந்த பகுதியிலும் பெரிதாக மழை நீர் தேங்கவில்லை. காலை 9.30 மணி நிலவரப்படி எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்கவில்லை. கணேசபுரம் சுரங்கப்பாதை தவிர வேறு எந்த சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கவில்லை. 21 சுரங்கப்பாதைகளில் வழக்கமான போக்குவரத்து நடைபெறுகிறது. மழை பாதிப்பு குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள், மேயர், ஆணையர் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர் என்று கூறினார்.
சென்னையில் எந்த பகுதியிலும் பெரிதாக மழை நீர் தேங்கவில்லை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
0