சென்னை: சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்களுக்கு சிறு இன்னல் கூட வராமல் தடுக்க திராவிட மாடல் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம். தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்டவற்றால் கனமழையின் தாக்கம் மக்களை பாதிக்காத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.