சென்னை : சென்னையில் 4 முதல் 5 நாட்கள் மழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் அளித்துள்ளார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து செல்வதால் நவ.30-ம் தேதி வரை மழை தொடர்ந்து பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 5 நாட்கள் மழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்
0