சென்னை: தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்திய கப்பல் உலா (கப்பல் பயணம்) பேச்சுவார்த்தை 2025 மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது. கப்பல் பயணம், சுற்றுலா, போக்குவரத்து தொடர்பான 4 நாட்கள் மாநாடு சென்னை துறைமுக அலுவலக கட்டிடத்தில் இன்று தொடங்குகிறது. ஒன்றிய கப்பல் போக்குவரத்து துறையின் கப்பல் பயணம் மிஷன் செயலகத்தின் சார்பில் நடைபெறும் மாநாட்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் உறுப்பினர்கள், கப்பல் இயக்குநர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
மாநாட்டில் ஒன்றிய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், தமிழக துறைமுகங்கள் துறை அமைச்சர், வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள். கப்பல் பயணம், துறைமுக செயல்பாடுகள் குறித்து கருத்து பரிமாற்றம், ஆய்வரங்கம், கலந்துரையாடல் ஆகியவை நடைபெறும் என்று துறைமுக பொறுப்பு கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.