சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் சக்தி சரவணன்(10) பலியானார். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிறுவன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிழந்தார். ஒரு வாரம் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி பலியானார்.