திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ஆட்டோ டிரைவரை தாக்கியதாக போலீஸ்காரர் மற்றும் வாலிபர் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (28), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மிட்டூர் பஸ் நிறுத்த பகுதியில் நின்றிருந்தார். அப்போது அங்கு புதூர் கிராமத்தை சேர்ந்த கோதண்டராமன் (35) என்பவர் வந்தார். இவர் சென்னையில் போலீசாக பணிபுரிகிறார்.
இவருடன் நாராயணபுரத்தை சேர்ந்த விஷ்ணு (25) என்பவரும் வந்தார். இருவரும் சேர்ந்து கார்த்திக்கிடம் தகராறு செய்து அவரை சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கார்த்திக்கை, அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்ற நிலையில் குரிசிலாப்பட்டு போலீசில் நேற்றிரவு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கோதண்டராமன், விஷ்ணு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.