சென்னை: வேளச்சேரியில் குறுகலான தெருக்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற குழாய் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது. கான்கிரீட் மழைநீர் வடிகால்களுக்கு பதிலாக குழாய் வடிகால்களை அமைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறுகலான சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கும்போது அதை பிரதான கால்வாய் வழியாக வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. சிறிய, குறுகலான தெருக்களில் கான்கிரீட் மழைநீர் கால்வாய்க்கு மாற்றாக குழாய் அமைத்து மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையில் மழைநீரை வெளியேற்ற குழாய் வடிகால்கள்
0
previous post