சென்னை: சென்னை பாரிமுனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.32 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பாரிமுனை இந்தியன் வங்கி அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அமானுல்லாவிடம் இருந்து ரூ.21 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மண்ணடியைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் என்பவரிடம் ரூ.11.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சென்னை பாரிமுனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.32 லட்சம் பணம் பறிமுதல்
0