சென்னை: சென்னை மாநகரில் நத்தம் புறம்போக்கு இடத்தில் குடியிருப்பதற்கு வீட்டு வரி ரசீது மறுப்பு திமுக உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் துணை மேயர் மகேஷ்குமார் ஆணையர் குமரகுருபரன் முன்னிலையில் நடைபெற்றது கூட்டம் தொடங்கியதும் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் உயர்நீத்தவர்களுக்காக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் அப்போது மதிமுக உறுப்பினர் சுப்பிரமணி எழுந்து மதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தி தங்களது மாத அமர்வு படி தொகையை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ஆணையாளர் மூலம் வழங்குவதாக குறிப்பிட்டார் கேள்வி நேரத்தின் போது தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி யு கணேசன் பேசுகையில் தற்போது எனது மண்டலத்தில் கடந்த பருவ மழையின் போது 15 வார்டுகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தது பல இடங்களில் அதே நிலை தான் இன்று வரை உள்ளது பருவ மழைக்கு முன்பு இதை சரி செய்து தர வேண்டும் கால்வாய்கள் அதிகம் இருப்பதால் பல இடங்களில் மழை காலத்தில் செல்ல முடிவதில்லை பக்கிங்காம் கால்வாயில் எட்டு அடி ஆழத்துக்கு சேறும் சகதியுமாக உள்ளது இதை அகற்றி தர வேண்டும் மூன்று மாதங்களுக்கு சேறு அகற்றும் இயந்திரம் எனது பகுதியில் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மேயர் பதிலளிக்கையில் தண்டையார் பேட்டை மண்டலத்தில் உள்ள கால்வாய்களை தூர்வார பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன கால்வாய்கள் விரைவில் தூர்வாரப்படும் என கூறினார் திமுக உறுப்பினர் ராஜகோபால் பேசுகையில் எனது வார்டில் நகர் நல மையம் இல்லை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு ஒரு ஆண்டுக்கு முன்பு முதல்வரால் திறக்கப்பட்டது ஆனால் இன்று வரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என குறிப்பிட்டார் 7வது வார்டு அதிமுக உறுப்பினர் டாக்டர் கே கார்த்திக் பேசுகையில் எனது வாடில் பக்கிங் காம் கால்வாய் அருகில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த ஒரு வணிக வளாகம் மாநகராட்சி ஆணையர் உத்தரவு படி அகற்றப்பட்டது தற்போது மீண்டும் அந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் வரத் தொடங்கியுள்ளன இதற்கு மேயர் பிரியா பதிலளிக்கையில் மாநகராட்சி ஆணையர் உத்தரவு படி வணிக வளாகம் அகற்றப்பட்டது.
அந்த இடத்தை மாநகராட்சி ஆக்கிரமிப்புகள் வராமல் பாதுகாத்து வருகிறது அந்த இடத்தில் எந்த ஆக்கிரமிப்பும் வரவில்லை என பேசினார் மண்டல குழு தலைவர் வி வி ராஜன் பேசுகையில் கூவம் ஆற்றில் 1980 க்கு முன் குளிக்கும் நிலை இருந்தது ஆனால் தற்போது அதில் சாக்கடை தான் ஓடுகிறது. கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி தேம்ஸ் நதி போன்று மாற்றப்பட்டால் தங்களது பெயர் வரலாற்றில் இடம் பெறும் இதற்கு மேயர் பதிலளிக்கையில் கூவம் ஆற்றை நீர்வள ஆதாரத்துறை பராமரிக்கிறது இதை சுத்தப்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் ஆலோசனைகள் வழங்கி உள்ளன விரைவில் சீரமைக்கப்படும் நிலைக்குழு தலைவர் விஸ்வநாதன் பேசுகையில் சென்னை மாநகரில் பத்திரம் பதிவு செய்யப்படாத வீடுகளுக்கு வரி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது இதனால் மூன்று லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் நீர்நிலை அல்லாத பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு இந்த நிலை இருப்பதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் இது சம்பந்தமாக பலமுறை கேள்வி கேட்டும் சரியான பதில் இல்லை பொதுமக்களின் மிக முக்கியமான பிரச்சனை பலர் மழை காலத்தில் கரண்ட் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்
நிலை குழு தலைவர் தனசேகரன் பேசும்போது தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ள திட்டப்படி ஆன்லைன் பட்டா வழங்கப்பட்டுள்ளது ஆனால் அவர்களுக்கு கூட வரி வசூல் செய்ய முடியாத நிலை உள்ளது கடந்த காலங்களில் ரெட் பார்ம் வழங்கப்பட்டது நீர் நிலைகள் அல்லாத பகுதிகளில் வரி வசூல் செய்யலாம் என்ற நிலை இருந்தது எனது பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 10 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன அவர்களுக்கு தற்போது வீட்டு வரி வசூல் செய்யப்படுவதில்லை என பேசினார் துணை மேயர் மகேஷ் குமார் பேசுகையில் உறுப்பினர்கள் நீர்நிலை இல்லாத பகுதிகளில் வரி வசூல் செய்ய கேட்கின்றனர் அப்படி கொடுத்தால் தான் அவர்களுக்கு மின் இணைப்பு கிடைக்கும் பல உறுப்பினர்கள் கோரிக்கை அதுவாக தான் இருக்கிறது இது குறித்து மேயரும் ஆணையரும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் உறுப்பினர்களை கருத்து உள்வாங்கப்பட்டு விட்டது அதனால் உறுப்பினர்கள் அனைவரும் அமைதியாக அமருங்கள் என கூறினார் இது குறித்து திமுக உறுப்பினர்கள் பலர் பேச எழுந்தனர்.
இதனால் சபையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டன உடனே மேயர் நேரமில்லா நேரத்தில் குறிப்பிட்ட நபர் மட்டும் தான் பேச வேண்டும் மற்றவர்களுக்கு பேச அனுமதி இல்லை என கூறினார் ஆணையாக குமரகுருபரன் பேசுகையில் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் தற்போது ஒன்றும் செய்ய முடியாது இது அரசின் கொள்கை முடிவு தமிழக அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே அதற்கு அனுமதி வழங்க முடியும் எனவே அரசு புறம்போக்கு நிலங்களில் தற்போது வரி வசூல் செய்ய முடியாது அதே நேரம் கார்ப்பரேஷன் நிலமாக இருந்தால் நாம் அரசின் அனுமதியை கேட்க வேண்டியதில்லை எனவே அரசின் அனுமதி கிடைத்ததும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் உறுப்பினர்கள் பேசியது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் நிலைகுழு தலைவர் தனசேகரன் குறிப்பிட்ட இடத்தை மீண்டும் ஆய்வு செய்து விதிகளின்படி அனுமதி கொடுக்கப்படும் என கூறினார் கூட்டத்தில் மணலி மண்டலத்தில் உள்ள பர்மா நகர் கன்னியம்மன் பேட்டை விநாயகர் புரம் மாதவரம் மண்டலத்தில் உள்ள பாரதியார் தெருவில் உள்ள எரிவாயு தகனம் மேடை 32 வது வார்டில் உள்ள எரிவாயு தகன மேடை கொரட்டூரில் உள்ள எரிவாயு தகனமேடை கொரட்டூர் சி.டி.எச் சாலையில் உள்ள எரிவாயு தகனமேடை சீரமைக்க நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பெரம்பூரில் உள்ள முரசொலி மாறன் பூங்காவை அறிவியல் பூங்காவை மாற்றி இரண்டு ஆண்டுகள் பராமரிக்க ரூபாய் 5.75 கோடி ஒதுக்கீடு செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டது அண்ணா நகர் கிழக்கு ரெண்டாவது முதன்மைச் சாலைக்கு ஔவை நடராஜன் முதன்மைச் சாலை என பெயர் சூட்டுவது உட்பட 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.