ஆம்பூர்: சென்னையில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்ட போது செல்போன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து மைசூர் செல்லும் C11 வந்தே பாரத் ரயில் ஆம்பூரைக் கடந்து ரயில் சென்று கொண்டிருந்த போது ரயிலில் பயணித்த குஷ்நாத்கர் என்பவர் செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து செல்போன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செல்போன் வெடித்ததையடுத்து பயணிகள் கூச்சலிட்டனர். மேலும் செல்போன் வெடித்து புகை வந்ததால் பயணிகள் கூச்சலிட்டதை அடுத்து வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.
பின்னர் ரயில் பெட்டிகளின் கதவுகள் திறக்கப்பட்டு புகை முழுவதும் வெளியேற்றப்பட்ட பின்னர் சுமார் 35 நிமிடங்கள் காலதாமதமாக வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்றது. செல்போன் வெடித்த சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.