சென்னை: சென்னையில் மேலும் 10 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியது. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 7 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 3 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூரில் உள்ள முதல்வர் படைப்பகம் இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கோவை, மதுரை, திருச்சி, சேலம், தாம்பரம், ஆவடி உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் விரைவில் முதல்வர் படைப்பகங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மேலும் 10 இடங்களில் முதல்வர் படைப்பகம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு
0