சென்னை: ழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிக்கை: ன்னையில் முருகன் கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம் 1ன்படி, சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் பேருந்து கந்தகோட்டம் முருகன் கோயில், ங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் கோயில், றுவாபுரி பாலமுருகன் கோயில், வடபழனி தண்டாயுதபாணி கோயில், தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும். ன்னையில் முருகன் கோவில்கள் ஒரு நாள் சுற்றுலா பயணத்திட்டம் -2 ன் படி, சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும.
பேருந்து வல்லக்கோட்டை- சுப்பிரமணியசுவாமி கோயில், குன்றத்தூர் – சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்போரூர்- கந்தசுவாமி கோயில், திருவான்மியூர்- றுபடை வீடு கோயில், மருந்தீஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும். மிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முருகன் கோயில்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண் 180042531111 மற்றும் 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com < http://www.ttdconline.com/ > மூலமாகவும் விவரங்களை பெறலாம். வ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.