சென்னை : சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள (சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட) புறநகர் பகுதிகளில் மினி பேருந்து இயக்குவதற்கான புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அந்த வழித்தடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மினி பேருந்து இயக்குவதற்கு புதிய அனுமதி சீட்டு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். புதியதாக கண்டறியப்பட்டுள்ள 72 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க விரும்புவோர் குறிப்பிட்ட வழித்தட விவரங்களை குறிப்பிட்டு சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 10.03.2025-க்குள் விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னையில் மினி பேருந்துகளை இயக்குவதற்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர்
0
previous post