Saturday, February 24, 2024
Home » கடந்த ஆண்டு 9.11 கோடி பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர்: மெட்ரோ ரயில் நிறுவனம்

கடந்த ஆண்டு 9.11 கோடி பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர்: மெட்ரோ ரயில் நிறுவனம்

by Suresh

சென்னை: கடந்த ஆண்டு 9.11 கோடி பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது. 2022-ம் ஆண்டை விட கடந்த ஆண்டில் மட்டும் 3 கோடி பேர் மெட்ரோ ரயிலில் அதிகமாக பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து பெரும்பாலோனோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் வாகனங்களின் நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்வோர் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி 8 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த ஆண்டில்(2023) மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயிலில் 2022ம் ஆண்டு 6.09 கோடி பேர் பயணம் செய்த நிலையில் கடந்த 2023ம் ஆண்டில் 3 கோடி பேர் மெட்ரோ ரயிலில் அதிகமாக பயணம் செய்துள்ளனர்.

மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

4 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi