சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே ஜூலை 5ல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சந்தீப்ராய் ரத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையின் 110 ஆவது காவல் ஆணையராக ஏடிஜிபி அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர், கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றியவர் அருண். சென்னையில் காவல் துணை ஆணையராக பதவி வகித்த அருண், திருச்சி, மதுரையில் ஆணையராக பதவி வகித்தார். ஆவடி மாநகரின் முதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் அருண். சட்டம்- ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடைடையே தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனை கூட்டத்தில் டி.ஜி.பி., சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.