சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் நேற்று ஒரேநாளில் மட்டும் 3.60 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று 3.60 லட்சம் பயணிகளும், நேற்று முன்தினம் 3.43 லட்சம் பயணிகளும் மெட்ரோவில் பயணம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு இன்றும், நாளையும் இரவு 10 மணிவரை மெட்ரோ ரயில் நெரிசல்மிகு நேர சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.