சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் கல்லூரி மாணவர் அதிவேகமாக ஓட்டிய கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். சிக்னலில் நிற்க பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன், மகாபலிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்சிஏ 2ம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் கிண்டியிலிருந்து, மீனம்பாக்கம் வழியாக காரில் வேகமாக வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்ததால், சாலையை கடக்க முயன்ற 3 பள்ளி மாணவர்கள் மற்றும் 2 துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர் மீது மோதியது. இதனால் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காரை ஓட்டி வந்த பாலமுருகனை தாக்கியுள்ளனர். இதையடுத்து காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமத்தித்தனர். சிக்னலில் நிற்க காரின் பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே மீனம்பாக்கம் பகுதியில் விபத்துக்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.