சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான, தங்கும் விடுதி, சென்னை பாரிஸ் கார்னர் பேருந்து நிலையம் அருகில் உள்ளது. அந்த இடத்தை, நீதித்துறைக்கு வழங்கப் போவதாக செய்திகள்வருகின்றன.
இது மாணவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, விடுதி இடத்தை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி, நீதித்துறைக்கு வழங்கும் முடிவை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.