சென்னை: ரூ.151 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகத்துடன் சென்னை மந்தைவெளி பேருந்து முனையம் நவீனமயமாக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் ரூ.151 கோடியில் அமைக்கப்படுகிறது. பன்முக போக்குவரத்து வசதிகளுடன் கூடிய இந்த கட்டடம் 29,385 சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது. வணிக வளாகத்துடன் கூடிய 2 கட்டடங்களாக சென்னை மந்தைவெளி பேருந்து முனையம் அமைகிறது.
முதல் கட்டடத்தில் வணிகம் அல்லது அலுவலக இடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. 184-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 96 நான்கு சக்கர வாகனங்களுக்கான வசதிகளை வழங்கும். இரண்டாவது கட்டடத்தில் சில்லறை விற்பனை இடங்கள், ஓய்வறைகள் உள்ளிட்டவை அமைகின்றன. இரண்டு அடித்தளங்கள் கொண்ட வாகன நிறுத்துமிடம் 318 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 96 நான்கு சக்கர வாகனங்களுக்கான வசதிகளை வழங்கும்.