Thursday, July 25, 2024
Home » சென்னையில் இடி, மின்னலுடன் பலத்த மழை 26 விமான சேவைகள் 2வது நாளாக பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

சென்னையில் இடி, மின்னலுடன் பலத்த மழை 26 விமான சேவைகள் 2வது நாளாக பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

by Mahaprabhu

சென்னை: சென்னையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் 2வது நாளாக நேற்று முன்தினம் 26 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த பலத்த மழை, இடி, மின்னல், சூறைக்காற்று காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 70 பயணிகளுடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், டெல்லியில் இருந்து 158 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன. அதன் பின்பு கோழிக்கோடு விமானம் திருச்சிக்கும், டெல்லி விமானம் பெங்களூருக்கும் திருப்பி அனுப்பப்பட்டன.

அதேபோல் மதுரை, மும்பை, கோவை, டெல்லி, ஐதராபாத், கோவா, வாரணாசி உள்ளிட்ட 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து தத்தளித்தன. அதன் பின்பு மழையின் வேகம் படிப்படியாக குறைந்த பின்பு விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரை இறக்கப்பட்டன. மேலும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய துபாய், குவைத், சிங்கப்பூர், கோலாலம்பூர், அபுதாபி, பாங்காக், டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட 14 விமானங்கள் தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றன. பலத்த மழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

You may also like

Leave a Comment

nine + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi