சென்னையிலுள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Stenographer: 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ₹25,500-81,100. வயது: 8.10.2023 அன்று 27 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, டைப்பிங் திறன் தேர்வு, சுருக்கெழுத்து எழுதும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ₹100/-. கட்டணத்தை ஸ்டேட் பாங்க் மூலம் ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள்/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது. www.clri.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.10.2023.