சாகர்: அரியானா மாநிலம் குருகிராமில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் ஐ போன்கள் கடந்த 15ம் தேதி கொண்டு வரப்பட்டது. மபி மாநிலம் சாகர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரி வந்த போது,ஒரு கும்பல் லாரி டிரைவருக்கு மயக்க மாத்திரைகளை கொடுத்து லாரியில் இருந்த 500 ஐபோன்களை கொள்ளையடித்தது. இதன் மதிப்பு ரூ.11 கோடி.
லாரி டிரைவரின் புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இதையடுத்து சம்மந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரி பாக்சந்த் உய்கே, உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பாண்டே ஆகியோர் அவர்களுடைய பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மேலும் தலைமை கான்ஸ்டபிள் ராஜேஸ் பாண்டேயை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கூடுதல் எஸ்பி சஞ்சய் உய்கே உத்தரவிட்டுள்ளார்.