சென்னை : சென்னை மற்றும் புறநகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, எண்ணூர், ஓஎம்ஆர், நாவலூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.