சென்னை: சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு பாரதியார் மண்டபம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பாரதியார் மண்டபம் என மாற்றம் செய்யப்பட்ட புதிய பெயர் பலகையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்தார். விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.