சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8,895க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒருகிராம் ரூ.110க்கும், ஒருகிலோ ரூ.1,10,000க்கும் விற்பனையாகிறது. கடந்த மாதம் 22ம் தேதி தங்கம் விலை பவுன் ரூ.74,320க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.71,440க்கு விற்றது.
தொடர்ந்து 22ம் தேதி தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது. 22ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,975க்கும், பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,800க்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை மீண்டும் பவுன் ரூ.72 ஆயிரத்தை நெருங்கியது. இதையடுத்து கடந்த 23ம் தேதி தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து ஒரு பவுன் ரூ.71,520க்கும் விற்பனையானது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8935க்கும், சவரன் ரூ.71,480க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ஒருகிராம் ரூ.111க்கும், ஒருகிலோ ரூ.1,11,000க்கும் விற்பனையாகிறது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8,895க்கு விற்பனை செய்யப்படுகிறது.