சென்னை: தங்கம் விலை கடந்த ஏப்ரல் 22ம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு பவுன் ரூ.74,320க்கு விற்பனையானது. இத்தைகைய விலையுயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து தங்கம் விலை குறைய தொடங்கியது. தொடர்ந்து கடந்த 15ம் தேதி தங்கம் விலை மளமளவென சரிந்து ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதை தொடர்ந்து, தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. கடந்த சில நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,920க்கும், சவரன் ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,360க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எவ்வித மாற்றமுமில்லாத நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து சவரனுக்கு ரூ.71,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.8950க்கும் , வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.110.80-க்கு விற்பனையாகிறது.