சென்னை: கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின் படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அவ்வப்போது தங்கம் விலை சற்று குறைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் அதிகரித்து, கணிக்க முடியாத அளவில் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,045க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.64,360க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.108க்கு விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால் நேற்று தங்கம் விலையில் மாற்றம் ஏதுமில்லை.
இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.8,055க்கு விற்கப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1 லட்சத்து 8 ஆயிரமாக விற்பனையானது.