சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.71,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. தங்கத்தின் விலை இந்திய மக்களின் மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இந்திய மக்கள் காது குத்து முதல் கல்யாணம் வரை என அனைத்து விஷேசங்களுக்கும் தங்கத்தை பரிசாகக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி வரும் தங்கம் விலையைக் காணும் போது, பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அந்த வகையில், சென்னையில் நேற்று (மே.22) சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,800க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.8975க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து கிராம் ரூ.112க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று (மே.23) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.71,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.8,940க்கு செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ.1 குறைந்து கிராம் ரூ.111க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.