சென்னை: சென்னையில் 11 நாட்களில் தங்கம் விலை ரூ.1,880 குறைந்தது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தினம், தினம் புதிய உச்சம் என்ற அளவில் தங்கம் விலை வரலாற்று உச்சத்தை பதிவு செய்து வந்தது. இதன் ஒரு பகுதியாக தீபாவளி அன்று (அக்டோபர் 31ம் தேதி) ஒரு சவரன் ரூ.59,640 என்ற வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. அதன் பிறகு தங்கம் விலை குறைந்து வந்தது.
இதற்கிடையில் தங்கம் விலை கடந்த 7ம் தேதி மள, மளவென சவரனுக்கு ரூ.1320 குறைந்து, ஒரு சவரன் ரூ.57,600க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 8ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,285க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,280க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் மீண்டும் தங்கம் விலை குறைந்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.7,275க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.58,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.57,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.7,220-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.