சென்னை: சென்னை அடுத்த பொத்தேரி தனியார் கல்லூரியில் படித்து வரும் ஜார்கண்டைச் சேர்ந்த 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட்டை சேர்ந்த லக்சயா, சாந்தனு, ஆதித்யன், கௌஷிக், ஹர்திக் கைது செய்யப்பட்டனர். 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.