Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

சென்னை பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை: கடிதம் சிக்கியதால் பரபரப்பு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே பெண் போலீஸ் ஒருவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு உடன் பணிபுரியும் காவலர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார். இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கொங்கராயனூர் பகுதியை சேர்ந்தவர் முகிலன். இவரது மனைவி சோனியா (26), இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. ேசானியா சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் கொங்கராயனுரில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனடியாக வீட்டில் இருந்த உறவினர்கள் அவரை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த காவலர் சோனியா தனது கைப்பட எழுதிய கடிதத்தில், தனது சாவுக்கு தன்னுடன் பணிபுரிந்த காவலர் ஒருவர் தான் காரணம் என எழுதி வைத்து வைத்துள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றி நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.